கூகுள் வேலையை தூக்கி எறிந்து, சமோசா விற்கும் இளைஞன்



கூகுள் நிறுவனத்தின் தான் செய்துவந்த வேலையை ராஜினாமா செய்த இந்திய இளைஞன் ஒருவர் வருடத்திற்கு 50 லட்சம் சம்பாதிக்கின்றார். அவரின் தைரியத்திற்கும், வெற்றிக்குமான காரணத்தை தெரிந்துகொள்வோம்.
உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனம் கூகுள். இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என உலகம் முழுவதும் பலர் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.
அப்படியிருக்க முனாஃப் கபாடியா என்ற இளைஞன், தான் பார்த்துக்கு கொண்டிருந்த கூகுள் நிறுவன வேலையை உதறிதள்ளிவிட்டு, சமோசா விற்பனை செய்து கொண்டு வருகின்றார்.
சில வருடங்களுக்கு முன்பு எம்பிஏ படிப்பை முடித்த முனாஃப், இந்தியாவை விட்டு வெளியேறினார். அடுத்த சில வருடங்களிலேயே கூகுளில் வேலை கிடைத்தது.அங்கு அவரின் தனித்திறமையால் அவர் நல்ல சம்பளம் வாங்கிவந்துள்ளார்.
அப்படியிருந்தும் மனநிறைவு அடையாத முனாஃப், அதை விட சிறந்த வேலை கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்த.இந்தநிலையில் சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் கூகுள் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
முனாஃப் -ன் தாய் நஃபிசா டிவியில் வரும் சமையல் நிகழ்ச்சியை பார்த்து அப்படியே சமைப்பதில் மிக ஆர்வமிக்கவர்.அதோடுமட்டுமல்லாமல் தன் சொந்த முயற்சியில் பல பதார்தங்களை புதுசு புதுசாக செய்வதில் ஆர்வமிக்கவர்.
இவர் செய்யும் பதார்த்தங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து, தன் தாயின் சமையலை கற்றுக்கொண்ட முனாஃப் அவரை போலவே சமைக்க ஆரம்பித்தார்.
மேலும் அதன்பின்னர் ‘தி போரி கிச்சன்’ என்ற ஒரு உணவகத்தை ஆரம்பித்தார். இவர் ஆரம்பித்த ஒரு வருடத்தில் 5 நட்சத்திர ஹோட்டல்களில் இவரின் சமோசாவை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தனர்.
அதோடுமட்டுமல்லாமல், இவரது கடையில் சமோசா, நர்கீஸ் கபாப் மற்றும் தபா கோஸ்த் போன்ற பல உணவுகளை வாங்க வரிசைகட்டி மக்கள் நிற்கின்றனர்.
இதன்மூலம் இந்த ஆண்டு மட்டும் ரூ 50 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார் முனாஃப். இனி வரும் ஆண்டில் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதே என் லட்சியம் என முனாஃப் தெரிவித்துள்ளார்.