(வரதராஜன்- நியுசிலாந்து)
இலங்கைத் திரைப்பட, தொலைக்காட்சி முன்னோடிகளுடன்...
"வெலிகெதர" திரைப்படம் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு படம். 70 களில் தயாரிக்கப்பட்டது. நடிகர் காமினி பொன்சேக கதாநாயகனாக நடித்தது.
ஐம்பது ஆண்டு கால சிங்களத் திரைவரலாற்றில் தெரிவான பத்துப் படங்களில் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது.
இதன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட, ஆபூர்வமாய்க் கிடைத்த படம் இது.
இதன் இயக்குனர் நிஹால் சிங்க( கையை நீட்டி வைத்திருப்பவர்) உதவி இயக்குனர் ரஞ்சித் பெர்ணான்டோ (கறுப்பு உடை) "கமராமன்" அன்ரூ ஜயமான ( அவர் அருகில்) ஆகிய மூவரும் ஒரே பாடசாலையில் படித்தவர்களும் "பில்ம் கிளப்பில்" அப்போது அங்கத்தவர்களாக இருந்தவர்களுமாகும்.
இலங்கையின் சிங்களத் தொலைக்காட்சி நாடகங்களின் முன்னோடி இயக்குனர் நிஹால் சிங்க அவர்கள்.
ஒளிப்பதிவாளர் அன்ரூ ஜயமானவிடம் இலங்கைத் தொலைக்காட்சிப் பயிற்சி நிலையத்தில் வீடியோக் கமராவைத் தொட்டு முதன்முதல் பயிற்சி பெறவும்,
ரஞ்சித் பெர்ணான்டோவின் கீழ் பணியாற்றவும் கிடைத்தமை நான் பெற்ற பேறாக இன்று நினைக்கின்றேன்.
ரஞ்சித் பெர்ணான்டோவின் கீழ் பணியாற்றவும் கிடைத்தமை நான் பெற்ற பேறாக இன்று நினைக்கின்றேன்.
படம்: நன்றி:- சுமித் ஜயந்த.


Post a Comment
Post a Comment