மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் பெரிய கரிசல் சந்தியில் டிப்பர் வண்டி மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில், பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியைக் கடக்கும் போது டிப்பர் வண்டி மோதியுள்ளது.
இன்று பிற்பகல் 2.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 10 வயதான மாணவியே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், டிப்பர் வண்டியின் சாரதி மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
மேலும், டிப்பர் வண்டி மீது பிரதேசவாசிகள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, டிப்பர் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரதேச மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக தலைமன்னார் பிரதான வீதியில் பெரிய கரிசல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment