மின் கம்பத்தைப் பதம் பார்த்தது லொறி



இன்று அதிகாலை 2.45 மணியளவில் பிரதான வீதி அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி முன்பாக இடம்பெற்ற விபத்தில் வீதியின் மத்தியில் அமைந்திருந்த மின் கம்பம் சீமெந்து ஏற்றி வந்த லொறியினால் சேதமாக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பதை காணலாம்.
மின்கம்பத்தை மோதி வீழ்த்தித்தப்பிச்செல்ல முயற்சித்த லொறியானது அக்கரைப்பற்று- பொத்துவில் வீதி பெரிய முகத்துவாரப்பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டதுடன் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.