வாகன சாரதிகளுக்கான அபராத திருத்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.
வாகன சாரதிகளின் தவறுகளுக்காக விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க, கடந்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, போக்குவரத்து துறையைச் சேர்ந்த சிலரிடம் இருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு வௌியிடப்பட்டமையால், அது குறித்து ஆராய்ந்து, புதிய அபராத பத்திரத்தை தயாரிக்க, ஜனாதிபதியால் குழுவொன்று அமைக்கப்பட்டது.
நிதி மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள், மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம், வாகனப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் இக் குழுவில் அடங்குகின்றனர்.
இதன்படி, குறித்த குழுவினால் தயாரிக்கப்பட்டு, இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையை, விரைவில் அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிஹால் சோமவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment