சில காரணங்களின் அடிப்படையில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டின் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படலாம் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்தது.
நாட்டில் நிலவியுள்ள வறட்சியான காலநிலையின் காரணமாக நாளாந்த மின்சார விநியோகத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.
இரவு வேளையில் 2,400 மெகாவோட்ஸிற்கும் அதிக மின்சாரம் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நீர் மின்சார உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாலும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 300 மெகாவோட் மின் பிறப்பாக்க இயந்திரம் செயலிழந்துள்ளதாலும், ஊழியர் பணிப்புறக்கணிப்பினால் எம்மிலிப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் கிடைக்காமையாலும் மின் விநியோகத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை தோன்றியிருப்பதாக சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.


Post a Comment
Post a Comment