வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரம்



வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

மாணிப்பாயில் உள்ள யாழ். வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று தாலை4.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்படி, மாகாணசபையின் அங்கத்துவக் கட்சிகளுக்கான சுழற்சிமுறை ஆசனம் இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, அப் பதவியில் இருந்த ரெலோ அமைப்பைச் சேர்ந்த மயூரனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே இ.ஜெயசேகரம் இன்று வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.