ரவியை பலிக் கடாவாக்க முயற்சி



ரவி கருணாநாயக்கவை பலி கடாவாக்க அரசாங்கம் முற்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்தின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு, ரவி கருணாநாயக்கவுக்கு பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, அவர் கூறியுள்ளார். 

இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அனைத்து சம்பவங்களையும் ரவியின் கணக்கில் போட்டுவிட்டு, பிணைமுறி மோசடி தொடர்பான உண்மைத் தன்மையை பரம இரகசியமாக்கவே அரசாங்கம் முற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பிணைமுறி மோசடியால் ஏற்பட்ட நஸ்டம் திரில்லியன் ரூபா என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறுகையில், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது 160 மில்லியன் தொடர்பில் மட்டுமே எனவும், டலஸ் அழகப்பெரும இதன்போது தெரிவித்துள்ளார்.