35வருடங்களின் பின்னர் வட மாகாணத்திற்கென பிராந்திய சுங்கத் திணைக்கள காரியாலயம் இன்று (10) தெல்லிப்பலையில் திறந்துவைக்கப்பட்டது.
நிதி மற்றும் வெகுஜன ஊடகதுறை அமைச்சர் மங்கள சமரவீர சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்.
இதுவரை காலமும் யாழ்.பிரதான தபால் நிலையத்தில் இயங்கி வந்த சுங்கத் திணைக்களமானது இன்றைய தினத்திலிருந்து பிறிதொரு பிரத்தியேக அலுவலகத்தில் இயங்க உள்ளது.
1982 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வட மாகாணத்திற்கான சுங்கத் திணைக்களம் இயங்கியதன் பின்னர் யுத்தம் காரணமாக பிராந்திய திணைக்களம் இல்லாமல் அழிவடைந்திருந்தன.
இச் சுங்க அலுவலகம் திறக்கப்பட்டதனூடாக இம் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் எனவும், கடந்த தசாப்பத்தங்களில் சுங்கத் திணைக்களத்தின் மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பற்றை நிலமையை மாற்றி மீளவும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்விற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சருடன் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுலானந்த பெரேரா, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடமாகாண கடற்படை கட்டளை தளபதி, யாழ்மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment
Post a Comment