(அப்துல்சலாம் யாசீம்)
புல்மோட்டை அரிசிமலை கடலில் குளிக்கச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி இன்று (07) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 03ம் வட்டாரத்தைச்சேர்ந்த அசன்தீன் நபீஸ் (15வயது) எனவும் தெரியவருகின்றது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
உயிரிழந்த சிறுவன் புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 10 ம் ஆண்டில் கல்வி கற்பவர் எனவும் விடுமுறை தினமான இன்று சக நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற போதே இவ்வனர்த்தம் இடம் பெற்றுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் ஜனாஸா புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment