நோர்வே, அறிக்கை ஜனாதிபதியிடம்



உமா ஓய திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலைமை தொடர்பான அறிக்கையை நோர்வே நிபுணர் குழுவினர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். 

முறையான திட்டமிட்ட செயற்றிட்;டங்கள் மற்றும் ஆய்வுகளின் பற்றாக்குறையே, நீர்கசிவு மற்றும் நீராதாரங்கள் வற்றிப் போதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உமா ஓய திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டின் விசேட நிபுணர்களின் குழுவொன்று அண்மையில் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது