(.இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் தர்ஹா டவுனை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் A.இக்பால் என்பவர் வபாத்தானார்கள்.. இவர் மர்ஹீம் சம்சுமா ரீச்சர், A.லெத்தீப் (PM) ஆகியோரின் சகோதரர்.
அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.இக்பால் அவர்கள் ஆசிரியராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, பாடநூல் வெளியீட்டுக் குழு உறுப்பினராகவென்று கல்விப் பணியாற்றியவர்.கவிதை, சிறுகதை, ஆய்வு என்று பல்துறையிலும் இயங்கிய இலக்கியவாதி. அறிவு வளத்துடன் வாழ்ந்த முன்னோடி.
இக்பால் அவர்கள் தர்காநகர் கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். பல மாணவர்களை ஆசிரியர்களாக்கி அவர்களின் வாழ்வை சுபீட்சமாக்கியவர்.
இவர் ஏற்கனவே பன்னிரண்டு நூல்களை வெளியிட்டிருக்கின்றார். இவரைப் பற்றி ஏனையவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், குறிப்புக்கள் உள்ளடங்கிய 'கவிஞர் ஏ. இக்பால் அயிம்பது வருட இலக்கிய ஆவணம்' என்ற நூல் பெரும் வரவேற்பு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் எழுதிய மெய்ம்மை என்ற நூல் 57 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இது கைக்கு அடக்கமான சிறிய கவிதைத் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் அவர் எழுதியுள்ள அனைத்து கவிதைகளும் அவரது வாழ்வோடு இரண்டறக் கலந்த உண்மைச் சம்பவங்களாகும். அவற்றை கவிதை வடிவில் யதார்த்தமாக எழுதியிருக்கின்றார்.
எல்லாம் வல்ல இறைவன் இவரின் பாவங்களை மன்னித்து, நல்லாடியார்கள் கூட்டத்தில் பொருந்திக் கொள்வானாக!



Post a Comment
Post a Comment