20க்கு மத்திய மாகாண சபையும் ஆதரவு



அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பான, 20வது திருத்தச் சட்டத்திற்கு மத்திய மாகாண சபையில் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இது தொடர்பான யோசனை அம் மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த யோசனைக்கு ஆதரவாக 40 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய, கிழக்கு உள்ளிட்ட ஐந்து மாகாண சபைகள் இதுவரை, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.