8 வகை அரிசிகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய 8 வகை அரிசிகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருவதுடன், சத்தோச விற்பனை நிலையங்களின் ஊடாக விலை குறிக்கப்பட்ட அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பா ஒருகிலோகிராமின் புதிய விலை 84 ரூபாய் என்பதுடன், வெள்ளை நாடு ஒருகிலோகிராமின் புதிய விலை 74 ரூபாய் ஆகும்.
அத்துடன், சிவப்பு நாட்டரிசி ஒருகிலோகிராமின் புதிய விலை 80 ரூபாய், வெள்ளை பச்சை அரிசி ஒருகிலோகிராமின் புதிய விலை 65 ரூபாய், சிவப்பு பச்சை அரிசி ஒருகிலோகிராமின் புதிய விலை 75 ரூபாய் ஆகும்.
மேலும், நறுக்கப்பட்ட (உடைந்த) அரிசி ஒரு கிலோகிராமின் புதிய விலை 60 ரூபாய் ஆகும். வெள்ளை பச்சை சம்பா ஒருகிலோகிராமின் புதிய விலை 90 ரூபாய் என்பதுடன், சிவப்பு சம்பா பச்சை அரிசி ஒருகிலோகிராமின் புதிய விலை 88 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.