திடீரென தீப்பற்றல்



(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் புதன்கிழமை 06.09.2017 அன்று மாலை சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பெனியன் சந்தியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், மோட்டார் சைக்கிளை விட்டுக் குதித்தமையால் தீக்காயங்கள் இன்றித் தப்பியுள்ளார்.

பயணம் சென்றுக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் தீடிரென  தீப்பிடிக்கவே, அவர் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டுத் பாய்ந்துள்ளார்.

இதில் சுமார் 2 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த மோட்டர் சைக்கிளை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து அணைத்துள்ளனர்.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.