ஊடகவியலாளர் பேரவையின் சிரமதானம்



அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் தலைவர் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அட்டாளைச்சேனை மையவாடியில் இன்று (24) சிரமதானம் இடம்பெற்றது.
ஊடக நடவடிக்கைகள், ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி, சமூக சேவை செயற்பாடுகளிலும் பேரவை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.
முஸ்லிம் – தமிழ் மக்களின் சமூக, சமய, கலாசார மற்றும் அரசியல் விவகாரங்களில் மேம்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.