மியன்மார் இன சுத்திகரிப்பைக் கண்டித்து மன்னாரில்



மியன்மாரில் இடம்பெற்று வரும் இன சுத்திகரிப்பைக் கண்டிக்கும் சாத்வீகப் போராட்டமொன்று மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மன்னார் நகர் மத்தியில் இடம்பெற்ற இந்த சாத்வீகப் போராட்டத்தில் மதகுருமார்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.
உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையாளர்களாக இருக்காமல், மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் எனவும் மிலேச்சத்தனமாக வன்முறையில் ஈடுபடும் மியன்மார் இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் வலியுறுத்தினர்.