பெங்களூரு:
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உண்மையை ஒரு போதும் அமைதியாக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அவரின் கருத்து.
கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிரூத்த டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது இந்திய ஜனநாயகத்துக்கும், பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் ஒரு சோகமான நாள் என பத்திரிக்கையாளர் சங்க தலைவர் கௌதம் லஹிரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கௌரி லங்கேஷின் கொலையை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் தொடரும் பத்திரிக்கையாளர்கள் கொலை
சமூகத்தில் நிலவும் அவலங்களை வெளிக்கொண்டுவரும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவது இது முதல்முறை அல்ல, இதற்கு முன்பு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை விமர்சித்து வந்த நரேந்ததிர தபோல்கர் என்பவர் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அதே ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி கோவிந்த் பன்சாரே சுடப்பட்டு நான்கு நாட்கள் கழித்து அவர் மரணமடைந்தார். இதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து மீண்டும் பெங்களூருவில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்.

Post a Comment
Post a Comment