அக்கரைப்பற்றில் புதிய பாடசாலை திறப்பு



(Firows Mohamed)
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களின் ஏற்பாட்டில் “மரம் வளர்த்த மண்” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் லீடர் அஷ்ரஃப் கனிஷ்ட பாடசாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால்  நேற்று (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் பள்ளிக்குடியிருப்பு முகம்மதியா வித்தியாலயத்துக்கு புதிய கட்டிடம் ஒன்றும் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சீ. தண்டாயுதபானி கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன் ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.