நாமல் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை



தங்காலை சிறைச்சாலை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக உள்ளிட்ட எண்மருக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்வதாகக் குற்றம் சுமத்தி, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.