அட்டாளைச்சேனையில் குடும்பப் பெண் மர்ம மரணம்



அட்டாளைச்சேனை, இல,14 பிரதான வீதி,இப்றாலெவ்வை அலிமா நாச்சி (றசீனா உம்மா) என்ற 60 வயது நிரம்பிய குடும்பப் பெண், கழுத்தில் துாக்கிட்ட நிலையில் மரணித்துள்ளார்  என்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன. 

இருப்பினும்,.இவரது மரணத்தில் தனக்குச் சந்தேகம் இருக்கலாம் எனவும் உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாநா அக்கரைப்பற்று, ஆதார வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிசார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.