ஊடக அறிக்கையிடல் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு



உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் இலங்கை இதழியல் கல்லூரி உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, புதிய அரசியலமைப்பு சீர்திருத்தப் பணிகளை நிறுத்துமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தின் செயற்குழு வலியுறுத்திய செய்தியை ஊடகங்கள் சில வௌியிட்டிருந்த விதம் தொடர்பில் பிரதமர் கருத்துக்களை வௌியிட்டார்