#அரியாலை: ஓரே குடும்பத்தின் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் தற்கொலை



ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

அரியாலை ஏ.வி. ஒழுங்கை சேர்ந்த சுநேத்திரா (28), ஹர்சா(4), சஜித் (2), சரவணா (2) என்பவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ​தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று அவரின் மனைவி உள்ளிட்ட மூன்று பிள்ளைகளும் இன்று குடும்பமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். 

தனது மூன்று பிள்ளைகளுக்கும் உணவில் விஷத்தை கலந்து சாப்பிடக் கொடுத்த தாய், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண்ணின் கணவர் கிருசாந்தன் இரு மாதங்களுக்கு முன்னர் கடன் தொல்லையால் உயிரிழந்தார். இதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே இப்பெண் இவ்விபரீதமான முடிவை எடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வடக்கு மாகாணத்தில் நுண் கடன் தொல்லையால் பலர் மனஉழைச்சலுக்குள்ளாகி வருவதாகவும், இவ்வாறு கடன் வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக அமைப்புகள் கோரிவருகின்றன. 

இவ்வாறான நிலையில், இன்று இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.