இலங்கையில் முதன்முறையாக சகல மாணவர்களையும் உள்ளடக்கியதாக கல்வி அமைச்சு இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்துடன் இணைந்து “சுரக்ஷா” காப்புறுதிதிட்டத்தினை இன்று (2) ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன¸ பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் வைபவ ரீதியாக அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கபட்டது.
ஆரம்ப நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசு10ரிய¸ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவிதாதனகே¸ அமைச்சர்களான ரவூப்ஹகிம்¸ கபீர்ஹசிம் தயா கமகே சரத் பொன்சேகா, ருவான் விஜேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்.
இந்த வேலைத்திட்டம் “என்றும் காப்போம் தேசத்தின் பிள்ளைகளை” என்ற தொனிப்பொருளில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட பிரேரணையின் கீழ் அரசினால் நடைமுறைபடுத்தப்படும் வேலை திட்டமாகும்.
4.5 மில்லியன் தொகையில் இலங்கையின் சகல பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் “சுரக்ஷா” மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அவ்வாறாக சகல அரச பாடசாலைகளில் கல்வி பெரும்¸ தனியார் பாடசாலைகள்¸ பிரிவேனாக்கள் உட்பட சர்வதேச பாடசாலைகள் பதிவு செய்யபட்ட கற்றல் செயற்பாடுகளில் ஈடுப்படும் தரம் 1 முதல் 13 வரையிலான வகுப்புகளுடைய பாடசாலை மாணவர்களுக்கும் விஷேட கல்வி பயிலும் மாணவர்கள் 5 வயதிலிருந்து 19 வயது வரையிலான சகல மாணவர்களுக்கும் இதில் பயன் பெறுவர்.
இதற்கு அமைய 2017 ம் ஆண்டின் கல்வி அமைச்சுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மூலம் 2017 ஒக்டோபர் 01 ந் திகதியிலிருந்து 2018 செப்டம்பர் 30 ந் திகதி வரையிலான ஓராண்டில் 24 மணித்தியாலயங்கள் உள்ளடங்களாக 365 நாட்களுக்கான காப்புறுதி வழங்கப்படும்.

Post a Comment
Post a Comment