வெலிகல வாவி திறந்து வைப்பு



(க.கிஷாந்தன்)

தலவாக்கலை வட்டகொடை - மடக்கும்புர பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த வெலிகல வாவி மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் நன்னீர் மீன்பிடித்துறை அமைச்சின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் இடும் வைபவம் 28.10.2017 அன்று வட்டகொடை - மடக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்றது.

மத்திய மாகாண மீன்பிடித்துறை விவசாயம் மற்றம் இந்து கலாச்சார தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.