#IsmailUvaizurRahman #Ashwin
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வின் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார்.
இது இலங்கை அணியின் 2 ஆவது இன்னிங்ஸில் அவர் வீழ்த்திய 4 ஆவது விக்கெட்டாகும்.
இதையடுத்து, டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார் அஸ்வின்.
31 வயது அஸ்வின், 54 ஆவது டெஸ்ட்டில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ 56 டெஸ்ட்களில் 300 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஸ்வின் முறியடித்துள்ளார்.
லில்லீ இச்சாதனையை நிகழ்த்திய நவம்பர் 27 ஆம் திகதியே அஸ்வினும் அவருடைய சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் 58 டெஸ்ட்களில் விளையாடி 300 விக்கெட்களை வீழ்த்திய இலங்கையின் முத்தையா முரளிதரன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.



Post a Comment
Post a Comment