உப்பாறில் உரசியது



திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின், மூதூர் - உப்பாறு பாலத்துக்கு அருகாமையில் பஸ்ஸூம் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இதில், ஜவர் காயமடைந்த நிலையில், கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 10.00 மணியளவில் திருகோணமலையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம், மூதூரில் இருந்து புறப்பட்ட டிப்பர் வாகனமும் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.