சுழல்காற்றினால் உடமைகள் சேதம்!



தாழமுக்கம் காரணமாக தற்போது இலங்கையின் கரையோர பகுதிகளில் குறிப்பாக காலி, மாத்தறை, கழுத்துறை,ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை,நுவரெலிய பகுதியிலும் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது!

பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது!
மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளில் மரமுறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது!

அடுத்த 24 மணி நேரம் வரை குறித்த காலநிலை தொடருமென்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை அவதான மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.