கொழும்பு,அண்மித்த பிரதேசங்களில் வீதிப் போக்குவரத்தில் பாதிப்புகள் குறித்து தெரியப்படுத்த



கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வீதிப் போக்குவரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து தெரியப்படுத்துவதற்கா
 கொழும்பு மாநகர சபையினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

0777313247 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கொழும்பு நகரத்தில் ஏற்படுகின்ற வாகனப் போக்குவரத்து பாதிப்புக்கள் மற்றும் ஏனைய அனர்த்த நிலமைகள் குறித்து தெரியப்படுத்தலாம். 

தற்போது கொழும்பு நகரத்தின் சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமக்கு தெரிய வந்துள்ளது.