கிண்ணியாவில் இருந்து வெளி மாவட்டத்துக்கு மண் அகழ்ந்து செல்வதை கண்டித்து இன்று (01) காலை 7.30 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலகத்தின், முன் வாசல் கதவை அடைத்து ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கிண்ணியாவிலிந்து அதிகளவான மணல் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் கிண்ணியாவின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகவும், அதிகளவான நில அறிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பார வாகனங்கள் கிண்ணியா நகர வீதியினூடாக செல்வதனால் வீதி விபத்துகள் ஏற்படுவதாகவும், ஆகவே இதனை தடுப்பதற்காக இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலாளர் அலுவலகத்துக்குள் உற்சென்று பிரதேச செயலாளரிடம் கோசமிட்டார்கள்.
இதன்போது, பொலிஸார் வருகை தந்து பிரச்சினை சம்பந்தமாக விசாரித்ததுடன், புவிச்சரிதவியல் பொறியலாளரை வரவழைத்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடினர்.
ஆர்ப்பாட்டகாரர்களினால் மகஜர் ஒன்று பிரதேச செயலாளரிடம் வழங்கப்பட்டது.tpytp

Post a Comment
Post a Comment