அக்கரைப்பற்று அஹமட்லெப்பை (ZDE) காலமானார்



#IRSAATH
அக்கரைப்பற்று, ஆலிம் வீதியினைப் பிறப்பிடமாகவும, A.V.V வீதியை வதிவிடமாகவும் கொண்ட அச்சி முகம்மது அகமட் லெப்பை (வலயக்கல்விப் பணிப்பாளர் - அக்கரைப்பற்று) இன்று (08.11.2017) காலமானார்.

அலுவலகப் பணியின் நிமித்தம் கொழும்புக்குச் சென்ற இவர், திடீரென சுகவீனமுற்று, கொழும்பு தனியார் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட பின் மரணித்தார்.
.
இவர்  கைறுடின் (B.com), A.M.தாஜ் ( அறிவிப்பாளர், சட்டத்தரணி) அவர்களின் அன்பு சகோதரரும் ஆவார்.
இவர் மட்டக்களப்பு மத்தி, கிண்ணியா கல்வி வலயங்களில் வலயக்கல்விப் பணிப்பாளாராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.