(Rizvi)
இறக்காமம் பொது ஜன பெரமுன கட்சியின் ஆரம்ப முதல் கூட்டம்.
இறக்காமம் பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் உறுப்பினர்கள் சந்திப்பு நேற்று ஞாயிறு17ம் திகதி S.M.M.இர்ஷாத் (அதாப்) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு வருகை தந்த வத்தளை முன்னாள் மேயர் அல் ஹாஜ் A.H.M நெளஷாத் அவர்கள் ஆரம்ப கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில்
எதிர் வரும் பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன என்னும் எங்களது புதிய கட்சி நாடு பூராகவும் போட்டியிட்டு வருகின்றன. அந்த வகையில் எமது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் லாபம் பெறுவதற்காக மக்களையும் முஸ்லிங்களையும் குழப்பி விட்டு ஆட்சி கதிரையில் ஏறி இப்போது இனவாதம் மதவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்போது முஸ்லிம்கள் நாடு பூராகவும் நன்கு உணர்ந்து விட்டார்கள் நாங்கள் ஏன் மீண்டும் மகிந்தவை ஆதரிக்க வேண்டும் பொதுஜன பெரமுன என்னும் புதிய கட்சியில் முஸ்லிம்களுக்கு என்ன என்ன உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இப் புதிய கட்சி யாப்பில் எழுதப்பட்டு நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
குறிப்பாக இறக்காமம் என்னும் மிகவும் பழமை வாய்ந்த இந்த ஊர் அபிவிருத்தியிலும் தொழில் வாய்ப்பிலும் அரசியல் வாதிகளினால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்
தாமரை மொட்டுச் சின்னத்தில் பொதுஜன பெரமுன என்னும் இந்த புதிய கட்சி நாடு பூராகவும் அதிகூடிய பிரதேச சபைகளையும். மாணகர சபைகளையும் கைப்பற்றி இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
தாமரை மொட்டுச் சின்னத்தில் பொதுஜன பெரமுன என்னும் இந்த புதிய கட்சி நாடு பூராகவும் அதிகூடிய பிரதேச சபைகளையும். மாணகர சபைகளையும் கைப்பற்றி இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
மேலும் இந்த ஊருக்கு அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்புகளையும் ஒரு அரசியல் அதிகாரம் ஒன்றையும் பெற்றுக் கொடுக்க இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இங்கு நடை பெற்ற கூட்டத்தில் வரிப்பத்தான்சேனை மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து மக்கள் இக்கட்சியில் உறுப்பினராக இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment