சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாதம்பை - பம்பல பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் சிலாபம் - சிங்கபுர பகுதியைச் சேர்ந்த நீதிபதி ஒருவரும் அவரது கணவரான வைத்தியரும் அவர்களது மகளுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின், வீடு திரும்புகையிலேயே குறித்த குடும்பத்தினர், இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment