ஆறு வருடங்கள் தன்னால் ஜனாதிபதியாக பதவி வகிக்க வாய்ப்புள்ளதா, என்ற விடயத்தில் மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்திடம் கருத்துக்களை கோரியுள்ளார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னரே, 19வது திருத்தச் சட்டம், நடைமுறைக்கு வந்தது.
இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஆறு வருடங்களாகும்.
எனவே, மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பதவி தற்போதுள்ள திருத்தத்திற்கு அமையவா அல்லது முன்னரான அரசியலமைப்பின் பிரகாரத்தின் அடிப்படையிலானதா? என்கிற விடயத்தை ஆராயும் நோக்கிலேயே உயர்நீதிமன்றத்திடம் இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய, 2020ஆம் ஆண்டுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த விடயத்தினை எதிர்வரும் வியாழக்கிழமை (11) ஆராயவுள்ளதாக, உயர்நீதிமன்ற பதிவாளர் சட்ட வல்லுனர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Post a Comment
Post a Comment