கொக்காவில் A9 வீதியில் கோர விபத்து



#ACCIDENT #KOKKAVIL #MANKULAM #JAFFNA #SRILANKA

4 பேர் பரிதாப மரணம்!

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் வான் ஓன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் நான்கு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

மான்குளம்-கொக்காவில் A9 வீதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மீட்கப்பட்ட சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.