முறிகள் குறித்த விசாரணை அறிக்கை அடுத்தவாரம் பாராளுமன்றில்



மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சபை இன்று கூடிய போது உரையாற்றிய சபாநாயகர் பிரதமரின் வேண்டுகோளுக்கமைய பாராளுமன்றம் இன்று கூட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.
கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காமல் அது குறித்து விவாதிப்பது பொருத்தமற்றது என நேற்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையின் போது பாராளுமன்றத்தில் இன்று அமளி துமளி ஏற்பட்டது.
இதன் காரணமாக கட்சி தலைவர்களின் கூட்டத்திற்காக சபையை ஒத்திவைக்க சபாநாயகர் கரு ஜயசூரிய சற்று முன்னர் தீர்மானித்தார்.