(க.கிஷாந்தன்)
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 8ஆவது சிரார்த்த தினம், 01.01.2018 அன்று காலை 12 மணிக்கு, தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ஆர்.ராஜாராம், முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், முன்னணியின் செயலாளர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு முதல் மலர்மாலையை முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் அணிவித்தார்.
இதனையடுத்து அதிதிகள் நினைவுச்சுடர் ஏற்றியதுடன், அங்கு கலந்து கொண்ட பொதுமக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றியமையும் குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment