தலைக்கவசம் இன்று மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர்: இருவர் பலி



காலி - அகுரஸ்ஸ பிரதான வீதியின் ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி கொங்கிரீட் தூணுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், இதனால் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் காயமடைந்த நிலையில், கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் இருவர் பலியாகியுள்ளனர். 

அத்துடன், சம்பவத்தில் பலியானவர்கள் இமதுவ பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதான இருவராகும். 

இதேவேளை, குறித்த மூவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.