முத்தரப்பு கிரிக்கெட்: முதலாவது போட்டியில் சிம்பாப்வேயை வீழ்த்தியது பங்களாதேஷ்



இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று டாக்காவில் ஆரம்பமாகியது.
சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
171 எனும் இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் 28 ஓவர்களில் 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு மிக இலகுவாக வெற்றியை தன்வசப்படுத்தியது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஷாகிப் அல் ஹசன் தெரிவானார்.