. இராஜகிரிய மேம்பாலம்,திறந்து வைக்கப்பட்டுள்ளது.



#RajagriyaFlyOver
இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம், சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

நான்கு வழிப் பாதைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும். 

இராஜகிரிய, பொரள்ளை போன்ற பகுதிகளில் நிலவும் கடுமையான வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கோடு குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஸ்பெயின் நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, இதற்காக 4,700 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பின்னிணைப்பு 

இராஜகிரிய மேம்பாலத்திற்கு, மாதுலுவாவே சோபித்த தேரரின் பெயரை சூட்டுமாறு ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்