ஆவரங்கால் பகுதியில்,பட்டம் வி்ட்ட சிறுவன் பலி



யாழ்ப்பாணம் - அச்சுவேலி - ஆவரங்கால் பகுதியில் 11 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இவர் காத்தாடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகின்றது. 

இந்தநிலையில், வெகுநேரம் சிறுவனைக் காணாது தேடிய வேளை அவர் கிணற்றில் விழுந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.