(அப்துல்சலாம் யாசீம் )
சட்டம் பற்றிய சிறந்த அறிவுத்திறனை மேம்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயலமர்வு இன்று (17) திருகோணமலை ரின்கோ புளு ஹோட்டலில் நடைபெற்றது.
இச்செயலமர்விற்கு பிரதம விரிவுரையாளராக ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய கலந்து கொண்டதுடன் 'குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்டத்துறை தலைமை அதிபரினால் ஆலோசனை பெறுதல்' பற்றி சட்டத்தரணிகளுக்கு விளக்கமளித்தார்.
திருகோணமலை அம்பாறை, பிபிலை,பொலன்னறுவை .சம்மாந்துறை போன்ற பகுதிகளைச்சேர்ந்த என்பதிற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.
ஜரோப்பிய நிதியுதவியுடன் எக்டெட் (ACTED) நிறுவனமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இணைந்து இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்நிகழ்வில் ஆரம்ப வரவேற்புரையை திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.முஹீத் வழங்கியதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி.சில்வா குற்றவியல் வழக்குகளில் பிணை சம்பந்தமாக அண்மைக்கால முன்னேற்றம் பற்றியும் சட்டத்தரணிகளுக்கு விளக்கமளித்தார்.

Post a Comment
Post a Comment