(அப்துல்சலாம் யாசீம் )
கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் !
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளுக்கு மாற்றமாக மோட்டார் சைக்கிள் செலுத்துவதால் ஏனைய பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவிப்பதோடு விபத்துக்களும் ஏற்படுவதாகும் பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் ,ஹெல்மெட் இன்றி சைக்கிள் ஓட்டுதல்,
லைசன்ஸ் இன்றி சைக்கிள் ஓட்டுதல்
ஒரு சைக்கிளில் மூன்று பேர் செல்லுதல் போன்ற விதி மீறல் கள் இடம் பெறுகின்றன. பெரும்பாலும் மாலை, இரவு வேளைகளிலேயே இந்த நிலைமை காணப் படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த வாரம் முனைச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயது சிறுவனின் கால் உடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளான்.
அதேநேரம் கட்டையாறு நடுப்பள்ளிக்கு முன்னாள் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுவன் காயமுற்றுள்ளான்.
இதே போல அறிவிக்கப் படாத சிறு சிறு விபத்துக்களும் ஆங்காங்கே இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே கிண்ணியா பகுதியில் விபத்துக்களை கட்டுப்படுத்த போக்குவரத்துப்
பொலிஸார் தமது கடமையை சரிவரச் செய்ய வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Post a Comment
Post a Comment