ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்குக் கௌரவம்



மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு முதன் முதலில் தெரிவுசெய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் இருவரை, அக்கட்சி மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரன், நேற்று (18), மாலை அணிவித்து கௌரவித்தார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
இதில் புதுக்குடியிருப்பு 08ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தினேஸ்குமார், 817 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார் என்பதுடன், கிரான்குளம் வடக்கு 09ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட தர்மரட்ணம் தயாநந்தளும் வெற்றிபெற்றார்.
வெற்றிபெற்ற இவ்விரு உறுப்பினர்களும், மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்துக்குச் சென்றபோதே, அவர்கள் இருவரையும் மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரன் மாலை அணிவித்துக் கௌரவித்தார்.
இப்பிரதேச சபைக்கு தமது கட்சியின் உறுப்பினர்கள் இருவர், முதன்முதலில் வெற்றிபெற்றுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினர்.
எனவே, கட்சி உறுப்பினர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் தமது கட்சி பல பிரதேச சபைகளைக் கைப்பற்றும் எனவும், மகேஸ்வரன் குறிப்பிட்டார்.