யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாணவனான இமானுவேல் தாமுவேல் (26) கயிற்றில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ்.பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார்.
குறித்த வீட்டிலிருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மாணவன் கல்வியில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவனின் அறையில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment