அம்பாறை, பொத்துவில் பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இந்திர பிரதிக்குமார் (வயது 37) என்பவர் உயிரிழந்துள்ளாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண வீடொன்றுக்குச் சென்று, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, குறித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மதுபோதையில் காணப்பட்டாரெனவும் சடலம், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment