குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதம் சேவையில்



உள்நாட்டு - வெளிநாட்டுப் பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாத்திரம் கண்டியில் இருந்து எல்ல புகையிரத நிலையம் வரையில் குளிரூட்டப்பட்ட ஐந்து பெட்டிகளைக் கொண்ட சொகுசு புகையிரத சேவையொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தச் சேவை நேற்று (03) முதல் இடம்பெறுகிறது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்ஹ குறிப்பிட்டுள்ளார். 

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7.40 இற்கு இந்த புகையிரத கண்டியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும். 

கண்டியில் இருந்து எல்ல ரயில் நிலையம் வரையிலான பயணக் கட்டணம் 1250 ரூபாவாகும். 

இந்த சேவையில், முன்கூட்டியே ஆசனங்களை பதிவு செய்து, பயணங்களை மேற்கொள்ள முடியும்.