ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் புத்தளம் மாவட் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகிய இருவரையும் மே மாதம் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலாபம் உயர்நீதிமன்ற நீதிபதியினால் இன்று (19) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆரச்சிகட்டுவ பிரதேச செயலாளரின் மீது தாக்குதல் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு சிலாபம் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்ற அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரையில் இவர்கள் கையொப்பமிட வராத காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment