தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை



ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக, குறித்த தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையின் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தொழிற்சாலையை செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தொழிற்சாலையிலுள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து ஐவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.