முன்னாள் அரச அதிபர் கே.கணேஷ் காலமானார்



வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அதிபராகக் கடமை புரிந்த .கந்தையா கணேஷ் அவர்கள் வியாழனன்று யாழ்ப்பாணத்தில் இளைவனடி சேர்ந்தார்.

யாழ்ப்பாணம் பொலிகண்டியில் 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி பிறந்த இவர் கொழும்பு சொய்ஸாபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து அரச சேவையில் பணிநிறைவைக் கண்ட இவர் சிறிது காலம் ஜெய்க்கா நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர், புனர்வாழ்வு அமைச்சின் மீள்குடியேற்ற பணிகளுக்கான பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியிருந்தார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் பத்து தினங்களுக்கு சிகிச்சை பெற்றவந்த இவர் வியாழக்கிழமை 10 ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்துவல்லிபுரம் இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும் வேலாயுதம், காலஞ்சென்ற வேலும்மயிலும், கண்மணி, சுந்தரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும் மற்றும் காலஞ்சென்ற அம்பலவாணர், திருச்செல்வம், காலஞ்சென்ற nஐயதேவி, தவதேவி காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி கணபதிப்பிள்ளை மற்றும் இரத்தினம், சிவப்பிரகாஷம், சரஸ்வதி மற்றும் பாலசிங்கம், யோகம்மா, நவரட்ணம், லக்ஷ்மி, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் மைத்துனரும், வேல்தாஸ், மகிழினி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையாரும், அபர்ணா, அமுதா, அங்கயன், ராஐ;குமார், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

யாழ்ப்பாணம் கரவெட்டி மத்தி கிழவிதோட்டத்தில் உள்ள அன்னாரது கௌரிசங்கர்பதி இல்லத்தில் அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை (11.05.2018) பிற்பகல் 12 மணிக்கு நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு அன்னாரது உடல் எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. .
தகவல்
குடும்பத்தினர்
'கௌரிசங்கர்பதி',
கிழவிதோட்டம்,
கரவெட்டி மத்தி,
கரவெட்டி
தொலைபேசி: 0776660562

வவுனியா அரசாங்க அதிபராக கணேஷ் அவர்கள் யுத்த நெருக்கடிகள் மிகுந்த சூழலில் பணியாற்றிய அந்த காலம் மறக்க முடியாதது. கடமையே கண்ணாக மக்கள் சேவை ஒன்றே குறியாகக் கொண்டு பணியாற்றினார். அந்த பணி குறித்து எடுத்துரைப்பது இலகுவான காரியமல்ல. அரச பணியாளர்களுக்கு சிறந்த முன் மாதிரியாகவும் பயனுள்ள ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்த அவரது மறைவு மனத்துயரைத் தருகிறது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.